Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அகதிகள் மறுவாழ்வு.

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், எல்லாவற்றையும் இழந்து, துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள், இங்கும் போதிய அடிப்படை வசதிகளின்றி நாலாந்தர குடிமக்களாக வாழ்ந்து (!) வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் பலர் மனைவி, குழந்தைகளுடன் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலக்கட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.   இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்து வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65