Tuesday, May 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பள்ளிக்கல்வித்துறை

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பரோபகாரம் வெகுவாக அருகிவிட்ட இன்றைய சூழலில், தங்களது உத்தியோகத்தைக் கடந்து, சமூகத்தின் நலன் கருதி செயல்படுதல் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற மனோபாவம் பெரிதாக உருவெடுத்திருக்கிறது. அவரவரின் நிதிநிலை ஒன்றே தனிநபர்களின் அளவீடாக கருதும் காலம் மேலோங்கி இருக்கிறது. அதனால் எல்லோருமே பணத்தின் பின்னால் ஓடுவது என்பது கிட்டத்தட்ட காலத்தின் கட்டாயம் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி என்பவர், தன் சொந்த கிராமத்துப் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக பள்ளிக்கூடம் கட்ட தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்கி நாயக அவதாரம் எடுத்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரோ, 'நட்பும் தகையும் கொடையும் பிறவிக்குணமாம்' என்கிறார். அதுபோ
பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வகுப்பறையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் கணித ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரகாஷ்குமார் (54) என்பவர், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, ஆசிரியர் பிரகாஷ்குமார், 6ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளிடம் வகுப்பறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் அன்றே கூறியிருக்கின்றனர். அதன்பேரில், பெற்றோர்கள் இதுபற்றி பள்ளித்தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரியை நேரில் சந்தித்துப் பு
சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியின்போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவதும் மிகச்சாதாரணமான ஒன்றுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சரவையில் பெரிதாக மாற்றங்கள் நிகழாவிட்டாலும், நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் இப்போதும் தொடர்கிறது. ஊழல் கறை படியாதவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி
ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

ரேங்க்கிங் முறை ரத்து உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்!; பள்ளிக்கல்வித்துறை தூக்கம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிப்பு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகளை வெளியிட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும்போது, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அந்தந்த மாவட்ட அளவில் சாதனை படைத்தவர்களின் பெயர்களும் வெளியிடப்படும். இதுதான் காலங்காலமாக இருந்து வந்த நடைமுறை.   இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்றும், மதிப்பெண் விவரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அத்துடன், எந்த ஒரு