
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன.
புதிய வகை ஒமிக்ரான் வைரஸ்
பற்றிய அதீத அச்சுறுத்தல்களால்
உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும்,
நடப்பு வாரத்தின் முதல் நாளான
திங்களன்றும் பங்குச்சந்தைகள்
கடும் சரிவைச் சந்தித்தன.
இந்நிலையில்,
முந்தைய கொரோனா வைரஸைக்
காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை
ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற
தகவலால் பங்குச்சந்தைகள் இன்று
தடாலடியாக மீண்டெழுந்தன.
இன்று வர்த்தக நேர முடிவில்,
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்
886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து,
57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை
நிறைவு செய்திருந்தது. அதேபோல,
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45
புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில்
நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள்