செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது.
'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ்