Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திமுக

காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுகவோ, அதிமுகவோ அல்லது ஏனைய பிற அரசியல் கட்சிகளோ அரசியல் செய்ய இப்போதைக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது. அதற்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோருக்கு குவியும் எதிர்வினைகளே சான்று. இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால், அவர்கள் எதைச்சொன்னாலும் அதை தங்கள் இஷ்டத்துக்கு கிழி கிழினு கிழித்து தொங்கவிடுவது அல்லது மரண கலாய் செய்வது என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரநிதியைக்கூட கொண்டிராத பாஜக, தங்கள்¢ இருப்பை பதிவு செய்ய விஜய், கமல்ஹாசன் போன்றோர் மீதான கணைகளை வீசுகிறது. எதை எதிர்பார்த்து அந்தக் கட்சி இவற்றையெல்லாம் செய்து வருகிறதோ, அதற்கு மேலாகவே அக்கட்சி இப்போது அற
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப