வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.
வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார்.
சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்...