தேர்தலில் தனித்து போட்டி; ரஜினி அதிரடி அரசியல் பிரவேசம்!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்தது. அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலில் 234 தொ குதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 31, 2017) அதிரடியாக அறிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆறு நாள்களாக ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை இன்று அறிவிப்பதாக அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார்.
அதன்படி, ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று காலை அவர் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்தார். அப்போது ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். அவர் அவ்வாறு கூறியதும், ரசிகர்கள் அரங்கம் அதிர பலத்த கரவொலி எழுப்ப