Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மகளிர்

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
- தில்லை தர்பார் -   தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. ஆனாலும், அதைப்பெற என்ன செய்வது என்று யோசித்து பார்த்தபோது உடனே ஞாபகம் வந்தது ஓர் அருமையான நண்பரின் பெயர்.   எட்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று என் கணவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. உதவிக்கு ஓடி வந்தது நண்பர் கூட்டம். உறவுகள் வேண்டாமென்று சொல்லவில்லை. உறவுகளைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நாம் துன்பப்படும்போது, 'நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் சொல்லும் நண்பர்களின் வார்த்தைகள் பெரிய டானிக்.   பல வருடங்களுக்கு முன்னால், பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதில் மூன்று பேருக்கு அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது வேலை கிடைத்து விட்டது. அந்த மூன்று பேரில் ஒருவன் என்னைப் பார்க்க வந
இவள் புதியவள்:  ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

இவள் புதியவள்: ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

அரசியல், மகளிர், வர்த்தகம்
''பெண்கள் சுதந்திரமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று இருக்க வேண்டும் என்றுதான் இஸ்லாத் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்களை ஆண்கள் சமுதாயம் வளர விடுவதில்லை,'' என பொறி பறக்கிறார் உமைபானு. மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருந்து வரும் உமைபானு, இன்றைய தேதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற முஸ்லிம் சிறுபான்மை பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். தவிர, அல் அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டின் தலைவராகவும் உள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றதாலோ என்னவோ, முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய ஊக்கியாகவும் இருந்து வருகிறார். அமைப்பின் சேவைகள், பெண்கள் அரசியல் குறித்தும் தைரியமாக பேசினார். அவர் சொல்கிறார்... என் கணவர், பாஷா. ஏற்றுமதி தொழில் செய்து
திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…

திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, மகளிர்
#தொடர்   எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை முக்காலமும் உணர்ந்து கொடுத்ததால்தான் திருக்குறளை, உலகப்பொதுமறை என உயர்வு நவிற்சியோடு சொல்கிறோம். வள்ளுவம் என்பது வாழ்வியல்; குறட்பாக்களை ஏதோ போகிறபோக்கில் எழுதி வைத்துவிட்டுப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது. திருக்குறளில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்களை, அவற்றை ஆழமாக வாசித்தவர்கள் நன்கு அறிவர். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை அதிநுட்பமாக பதிவு செய்திருப்பான் வள்ளுவன். பெண்களிடம் எப்போதும் ஒருவித பாசாங்குத்தனம் இருக்கும். நாடு, மொழி, இனம் கடந்து எந்த ஒரு பெண்ணிடமும் இருக்கும் குணாதிசயங்களில் இத்தகைய போலியான கோபமும் ஒன்று. இதை அவர், 'புலவி நுணுக்கம்' (Feigned anger) எனக்குறிப்பிடுகிறார். இந்த குணம்கூட பெண்கள், தன் தலைவனிடம் செல்லமாக கூடலுக்கு முன் சிறு ஊடல் கொள்வதற்காக மேற்கொள்ளும் கலைதான் என்பது பொய்யாமொழியனின் எண்ணம்.
சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி
அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர்.கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். அந்த நிலையில் அந்தப்பெண், ஏதோ ஒரு அழகு ந