Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வேலூர்

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இன்று மாலை அவர், வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்கும்படி, பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இ
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர