Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மதுரை

புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே!

புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே!

அரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம்.   ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி
சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

அரியலூர், கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திண்டுக்கல், மதுரை, முக்கிய செய்திகள், விழுப்புரம்
அனிதா மரணம், அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கிளர்ச்சி, இவற்றுக்கிடையே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஒற்றை மனுஷியாக ஈர்த்து இருப்பவர், ஆசிரியை சபரிமாலா. கடந்த சில நாள்கள் முன்பு வரை திண்டிவனம் வைரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இப்போது நீட் எதிர்ப்புப் போராளி. மட்டுமல்ல. சமத்துவக்கல்விக்கான போராளியும்கூட. ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் என்ற அளவில்தான் அவர் பெயர் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உள்ளனர். பேச்சாளர். பட்டிமன்ற நடுவரும்கூட. தன் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்து, செயல்வீரராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஜெயகாந்தன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதுவுமே கிடையாது. சபரிமாலாவின் பணித்துறப்பின் மீதும் சில எதிர்மறை விமர்சனங்கள் வரவே செய்கின்றன. தனியார் தொலைக்காட்சி
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப
தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (All India Institute of Medical Sciences), தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு பிரதமராக இருந்தபோது, தெற்கு ஆசியா அளவில் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்றும், அதுவே தனது கனவு என்றும் கூறினார். பின்னர், 1956ம் ஆண்டில் புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பல் மருத்துவம், செவிலியர் பயிற்சி, துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் எய்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. இந்நிலையில், இந்தியாவில் மேலும் ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.   இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர