Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விளையாட்டு

டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, ஒரு நாள் போட்டிகளில் 73 முறை அவுட் ஆகாமல் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. இது, டோனிக்கு 300வது ஒரு நாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் டோனி, அவுட் ஆகாமல் 49 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 100வது அரை சதம் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், 50 ஓவர்களும் முடிந்து விட்டன. எனினும், அவர் மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரையும் ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினர். 4 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் இந்த போட்டியில் 29வது சதத்தை பூ
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி
கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

முக்கிய செய்திகள், விளையாட்டு
தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ்
இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

முக்கிய செய்திகள், விளையாட்டு
சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 3-0 கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலியின் தலைமைக்கு கிடைத்தை மிகச்சிறந்த வெற்றி இதுவாகும்.   இந்த தொடரில் இந்தியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி இலங்கையை துவம்சம் செய்ய சில முக்கிய காரணங்கள் உள்ளன. பெரிதாக கஷ்டப்படாமலேயே இந்தியா இந்த இமாலய வெற்றிகளை ருசித்துள்ளது. அதிலும் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வெளிநாட்டு தொடர் ஒன்றில் அது வொய்ட்வாஷ் செய்தது இதுதான் முதல் முறை என்ற சாதனை மகுடத்தை கேப்டன் விராட் கோஹ்லி சூடிக்கொள்ள சில வீரர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவில் சிறு தொடரை ஆடி முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்ககா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு இந்த வெற்றி கண்டிப்பாக பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பலாம். 3வது டெஸ்
கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லகெலே: இலங்கை-இந்தியா இடையிலான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரங்களில் சுருண்டது. இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்
முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று (29/07/17) 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீ
கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது. காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு இழந்தது. இந்தியா இன்று காலை தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களில் டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பு கோஹ்லி போட்ட சதம். நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்திருந்த இந்தியா இன்று மேலும் 51 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி சிறப்பான சதம் போட்ட கையோடு டிக்ளேர் செய்ய