Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

சினிமா, முக்கிய செய்திகள்
வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அஜித்தின் 'விவேகம்'. ஆனால் அதற்குள்ளாகவே இப்படம் ரூ.120 வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.54.5 கோடிக்கு சென்றுள்ளது.
மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

அரசியல், முக்கிய செய்திகள்
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று (ஆக.,14) சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் ஓரிரு நாள்களில் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தெரிகிறது.
கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லகெலே: இலங்கை-இந்தியா இடையிலான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரங்களில் சுருண்டது. இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்
காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்?

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்?

முக்கிய செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரிக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி மீதான டிஆர்பி வெகுவாக குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு ஜூலியானா வெளியேற்றப்பட்டதும் ரசிகர்கள் குறைந்ததற்கு இன்னொரு காரணம். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், காயத்ரி மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னார். அந்த டாஸ்க்கில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை எவிக்ஷன் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த வாரம் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து சக்தி, காயத்ரி ஆகியோருக்குதான் மிகக்குறைந்த வாக்குகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிண்டு ம
கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவர் ஒருவரின் மனிதநேயமிக்க முயற்சியால் பல குழந்தைகளின் உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரக்பூர். பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மூளைவீக்க நோயால் 60 குழந்தைகள் இறந்தது இங்கேதான். குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூளைவீக்க சிகிச்சைப் பிரிவின் தலைவருமாக இருக்கிறார். 10ஆம் தேதி இரவு. ஆக்சிஜன் குறைபாட்டால் அபாய எச்சரிக்கை பீப் சத்தம் ஒலிக்கிறது. அவசர கால சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் இது இரண்டு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு? மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றித் தேவை, அதுதான் அவர்களின் உயிர்காக்கும் மருந்து. இதுவும் அந்த மருத்துவருக்கு நன்றாகத் தெரியும். ஆக்
கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு

கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு

முக்கிய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்றுகூட தெரியாமல் இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது தமிழார்வர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கவிஞர் சினேகன்,'தாயுமானவர்' என பதில் அளித்தார். உண்மையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது, பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. 'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...' என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். வந்திருக்கிறோம். ஆனால், அந்தப்பாடலை எழுதியது யார் என்று தெரியாமல்தான் பலரும் இருக்கிறோம். தமிழுக்கு நேர்ந்த இன்னொரு கொடுமை, இது. இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 4ம் தேதி, போட்டியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடினர். அப்போது கவிஞர் சினேகன் சக போட்டியாளரான ஜூலியானாவிடம் இந்தப் பாடலை எழுதியது யார்? என்று கேட
மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி,
கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இன்று (12/07/17) அளித்த பேட்டி: கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் கிடையாது. அங்கு தொடர்ந்து செயல்படும். எண்ணெய் வளம் உள்ள இடங்களில் கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் தொடர்ந்து எடுக்கப்படும். மக்களின் அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு கிடையாது. ஓஎன்ஜிசி மக்களுக்காக செயல்படும் நிறுவனம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி:  நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (11/08/17) சந்தித்தார். அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பினார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் அணி கடும் கொதிப்படைந்து உள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்போம் என்று தினகரன் அணியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பழனிச்சாமி பின்னர் நாடாளுமனற் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். இச்ச
தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா?  மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்