Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், இப்போது சாலையோரங்களில் பெட்டிக்கடை வைப்பதென்றாலும் ஆதார் அட்டை அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெட்டிக்கடை நடத்த உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாகக் கூறினார்.

இதனையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும் அனுமதி இல்லை.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.