Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

படுக்கை அறையில் 60% இந்தியர்களுக்கு பரம திருப்தியாம்! கணக்கெடுப்பில் அம்பலம்!!

இந்தியாவில், படுக்கை
அறையில் துணையுடனான
உறவில் பரம திருப்தி
கிடைப்பதாக 60 சதவீத
இந்தியர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். கடந்த
பத்து ஆண்டுக்கு முன்பு
இந்த திருப்தி உணர்வு
31 சதவீதமாக இருந்தது.

‘இந்தியா டுடே’ பத்திரிகை நிறுவனம் பதினேழாவது பாலியல் கணக்கெடுப்பு முடிவுகளை கடந்த நவம்பரில் வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களைவிட, இந்தியாவில் இப்போது, தங்களது முதல் பாலியல் அனுபவங்களைப் பற்றி பேசுவோரின் வயது வித்தியாசம் பெருமளவு குறைந்துள்ளதாக கூறுகிறது, அக்கருத்துக்கணிப்பு.

உதாரணமாக, கடந்த 2003ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்போது, 32 சதவீத இந்தியர்கள், தங்களுக்கு முதல் பாலியல் அனுபவம் என்பது 18 முதல் 26 வயதுக்குள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். 8 சதவீதம் பேர், தங்களுக்கு முதல் பாலியல் அனுபவம் 18 வயதுக்கு முன்பே நடந்தது என்றும், 6 சதவீதம் பேர் 27 முதல் 40 வயதுக்குள்தான் முதல் பாலியல் அனுபவத்தைப் பெற்றதாகவும் கூறியுள்ளனர். எஞ்சியுள்ள 54 சதவீதம் பேர் பாலியல் பற்றி பேசினாலே காத தூரம் ஓடிவிட்டார்கள் என்கிறது அப்போதைய கணக்கெடுப்பு விவரம்.

அதன்பிறகு 2013ல் நடந்த
கணக்கெடுப்பில் கிடைத்த
தரவுகளோ, 2003ம் ஆண்டைக்
காட்டிலும் ஆச்சர்யமான
முடிவுகளைக் கொடுத்து இருந்தது.
அந்த ஆண்டில் நடந்த
கணக்கெடுப்பில், 76 சதவீத
இந்தியர்களுக்கு முதல் பாலியல்
அனுபவம் என்பது அவர்களுடைய
18 முதல் 26 வயதுக்குள்
நடந்ததாகவும், 13 சதவீதம்
பேருக்கு பதினெட்டு வயதுக்கு
முன்பே முதல் பாலியல்
அனுபவம் கிடைத்ததாகவும்
கூறியுள்ளனர். 11 சதவீதம் பேர்
27 வயதுக்கு பிறகுதான்
தங்களுக்கு ‘அந்த மாதிரியான’
சமாச்சாரங்களே தெரிய
வந்ததாகவும் சொல்லி
இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடப்பு 2019ம்
ஆண்டுக்கான பாலியல்
அனுபவங்கள் பற்றிய
கணக்கெடுப்பு முடிவுகளை
கடந்த நவம்பரில்
வெளியிட்டுள்ளது,
இந்தியா டுடே நிறுவனம்.

பாலியல் அனுபவங்களைப்
பெறுவதில், இந்தியாவில்
வியத்தகு மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளதாக ஆச்சர்யத்துடன்
கூறுகிறது இந்தியா டுடே.
அதாவது, இப்போதெல்லாம்
18 வயதுக்கு முன்பே 33
சதவீத இந்தியர்களுக்கு முதல்
பாலியல் அனுபவங்கள்
கிடைத்து விடுகிறது என்பது
தெரிய வந்துள்ளது.
52 சதவீதம் பேருக்கு
18 முதல் 26 வயதுக்குள்தான்
முதல் பாலியல் அனுபவம்
கிடைத்ததாகச் சொல்கிறது
கணக்கெடுப்பு. 27 முதல் 40
வயதுக்குள் முதல் பாலியல்
அனுபவத்தைப் பெற்றதாக
14 சதவீதம் பேர்
கருத்துகளைச் சொல்லி
இருக்கிறார்கள்.

இந்தியா டுடே பத்திரிகை
நிறுவனமும், இந்த ஆய்வில்
மேலும் சில ‘ஏ’டாகூடமான
வினாக்களையும் எழுப்பி
இருக்கிறது. அதாவது, நீங்கள்
உங்கள் கணவன் / மனைவியை
எப்போதாவது ஏமாற்றி
இருக்கிறீர்களா? திருமண
உறவுக்கு வெளியே உங்களுக்கு
யாருடனும் உறவு இருக்கிறதா?
என்றும் கேட்டிருக்கிறது. அதற்கு
19 சதவீதம் பேர் ‘ஆமாம்’ என்றே
பதில் அளித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் 19 நகரங்களில் 4028 பேரிடம் இந்தக் கணக்கெடுப்பை இந்தியா டுடே நடத்தி இருக்கிறது. 14-29, 30-49, 50-69 என மூன்று வகையான வயது பிரிவினரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில்தான் மேற்கண்ட முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

இன்னும் சில வினாக்கள் இருக்கின்றன…

அதாவது,
படுக்கையில் துணையுடன்
இருக்கும்போது யார் மேலே
இருப்பதை (செக்ஸ் பொஸிஷன்)
விரும்புகிறீர்கள்? என்ற வினாவுக்கு,
40 சதவீதம் பேர், ஆண்கள் மேலே
இருந்தால்தான் உறவு திருப்தியாக
இருக்கும் என்று தெரிவித்து
இருக்கிறார்கள். இதில் வேடிக்கை
என்னவென்றால், இப்படி
சொல்வோரின் விகிதம்
ஆண்டுதோறும் வேகமாக
குறைந்து வருகிறது.

கடந்த 2012ல் நடந்த
கணக்கெடுப்பில் ஆண் மேலேயும்,
பெண் கீழேயும் இருக்க வேண்டும்
என்று 59 சதவீதம் பேர் ஆசையோடு
சொல்லி இருக்கிறார்கள். இப்போது,
பெண் மேலே இருந்தால் நன்றாக
இருக்கும் என்றும் 22 சதவீதம் பேர்
விரும்புகிறார்கள்.
(‘கெட்டாலும் male மக்கள் male
மக்கள்தான்’) என்று இங்கே
வாதிட முடியாதே.

துணையுடனான பாலியல்
உறவில் திருப்தி அளிக்கிறதா?
என்ற அதிமுக்கிய வினாவுக்கு,
நடப்பு கணக்கெடுப்பின்போது
60 சதவீதம் பேர் மிகவும்
திருப்திகரமாக உணர்வதாகச்
சொல்லி இருக்கிறார்கள்.
அவ்வளவு மோசமுமில்லை;
ரொம்ப திருப்தி என்றும்
சொல்ல முடியாது என்று
31 சதவீதம் பேர் பட்டும்
படாமலும் சொல்லிவிட்டு
நகர்ந்து போயிருக்கிறார்கள்.

இதுவே கடந்த பத்து
ஆண்டுகளுக்கு முன்பு (2009)
நடந்த ஆய்வின்போது,
31 சதவீதம் பேர்தான்
படுக்கை அறை சமாச்சாரங்களில்
‘பரம திருப்தி’ என்று சொல்லி
இருக்கிறார்கள். துணையுடன்
பாலியல் இச்சையைத் தணித்துக்
கொள்வதற்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏதேனும்
நேரடித் தொடர்பு இருக்குமோ
என்று தெரியவில்லை.
ஏனெனில், 2009 காலக்கட்டத்தில்
உலகம் முழுவதும் கடும்
பொருளாதார நெருக்கடி (Recession)
நிலவியது. இந்தியாவும் அதன்
தாக்கம் அதிகமாகவே இருந்தது.
பலர் வேலைவாய்ப்பை இழந்தனர்.
ஒருவேளை, அந்த சோகத்தில்,
படுக்கையும் கசந்து இருக்கலாம்
என்பது என்னுடைய கண்டுபிடிப்பு.

எனினும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் படுக்கை அறை சமாச்சாரம் பெரிய அளவில் திருப்திகரமான (60%) பாதைக்கு திரும்பி இருப்பது என்பது ஆரோக்கியமான சங்கதிதான். ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் என்னென்ன செய்தால், பாலியல் திருப்தி முழுமையாகக் கிடைக்கும் என்பதற்கான காமசூத்திரங்களை இந்தியர்கள் கற்றுக்கொண்டார்களோ என்னவோ.

மேலும், பாலியல் உறவு கொள்ளும் வேளையில் படுக்கை அறையில் விளக்கு வெளிச்சத்தை 64 சதவீத பெண்களும், 60 சதவீத ஆண்களும் விரும்புவதில்லையாம். (அப்படியானால், உச்சக்கட்டம் என்கிறார்களே… அதுபோன்ற தருணங்களில், இருட்டுக்குள் துணையின் நுண்உணர்வை எப்படி அறிந்து கொள்வது என்றெல்லாம் கேட்கக்கூடாது).

பெண்களின் யோனியில்
(பிறப்புறுப்பு), அவர்களை
உச்சக்கட்ட நிலைக்குக்
கொண்டு செல்லக்கூடிய
புள்ளியை ‘ஜி-ஸ்பாட்’ (G-spot)
என்கிறார்கள். அந்த மர்ம
ஸ்தானம் இருக்கும் இடம்
தெரியும் என்று 53 சதவீத
ஆண்கள் பெருமையாக
சொல்லி இருக்கிறார்கள்.
50 சதவீத பெண்களுக்கும்,
தங்களுக்கு ‘ஜி-ஸ்பாட்’
இருக்கும் இடம் தெரியும்
என்கிறார்கள்.
(நிலவில் விழுந்த
விக்ரம் லேண்டர்
விண்கலத்தை கண்டுபிடிப்பதைக்
காட்டிலும் ஜி-ஸ்பாட்டை
கண்டுபிடிப்பது கடினமாக
இருக்கும் என்று நினைக்கிறேன்).

மேலும், 45 ஆண்கள், தங்கள் துணையிடம் ஆபாசப்படங்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதாக சொல்கின்றனர். 15 சதவீத பெண்களும், துணையிடம் அதுபற்றி பேசுவார்களாம். பரத்தையர்களிடம் பணம் கொடுத்து, பாலியல் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இருப்பதாக 48 சதவீத ஆண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பெண்களும் கூட ஆண்களிடம் பணம் கொடுத்து சில நேரம் உல்லாசமாக இருந்த அனுபவம் உண்டு என்று 3 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள்.

பாலியல் லீலைகளில் மேலும் சில முக்கிய வினாக்களும் இடம்பெற்றுள்ளன.

அதாவது, இணையங்களிலோ
அல்லது டிவிடிகளிலோ
ஆபாச படங்களை (porn videos)
தினமும் அல்லது எப்போதாவது
பார்க்கும் பழக்கம் இருப்பதாக
நான்கில் மூன்று பேர்
ஒப்புக்கொண்டுள்ளனர். இதில்,
ஆண், பெண் இருபாலரும் அடக்கம்.
எனினும், 85.5 சதவீத
ஆண்களுக்கு, ஆபாசப்படங்களை
பார்ப்பதில் அதீத ஆர்வம்
இருப்பதோடு, அடிக்கடி
பார்க்கும் பழக்கம்
இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கலவி என்பதே விளையாட்டுதானே. படுக்கையில் லீலைகளில் ஈடுபடும்போது தங்கள் துணையை செல்லமாக கடிப்பது, அறைவது, தள்ளி விட்டு விளையாடுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவதாக 31 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

கலவியில் ஈடுபடும்போது இந்தியர்களிடம் இன்னொரு வினோத பழக்கமும் இருக்கும் போலருக்கு. அதை வினோத நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். 89 சதவீதம் பேர், படுக்கையில் துணையுடன் உறவில் இருக்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது அல்லது வீடியோ எடுப்பது பிடிக்கும் என்று தெரிவித்து இரு க்கிறார்கள்.

இன்னொரு முக்கிய சங்கதியும் கூட இருக்கு. நான்கில் ஒருவருக்கு, பணிபுரியும் இடத்தில் திருமண உறவுக்கு வெளியிலும் இன்னொரு தொடர்பு உண்டு என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தகைய, கூடுதல் தொடர்பு இருப்பதாக 31 சதவீத ஆண்களும், 20 சதவீத பெண்களும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர். (மொபைல் போன்களில் இரண்டு சிம் கார்டுகள் இருப்பது என்பதெல்லாம் இப்போது அடிப்படை அம்சமாகவே மாறிவிட்டது).

பாலியல் உறவைப் பற்றி பேசிவிட்டு, கற்பைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? ‘கற்பை பொதுவில் வைப்போம்’ என்று பாரதியார் சொன்னாலும், இன்றும்கூட அது பெண்களுக்கு மட்டுமே உரியதாக பார்க்கப்படுகிறது. 53 சதவீதம் பேர், தங்கள் துணை கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்கிறது இந்தியா டுடேயின் கணக்கெடுப்பு.

 

– பேனாக்காரன்